in

தீபாவளிக்கு தயாராகும் நாட்டரசன் கோட்டை செட்டிநாட்டு பலகாரங்கள்

தீபாவளிக்கு தயாராகும் நாட்டரசன் கோட்டை செட்டிநாட்டு பலகாரங்கள்

 

தீபாவளிக்கு தயாராகும் நாட்டரசன் கோட்டை செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடும் ஊழியர்கள்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டை பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செட்டி நாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைக்கு அடுத்தாற்போல் பலகாரங்களே முக்கிய இடம் பிடிக்கும். அதிலும் நமது தென் மாவட்டஙகளில் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு என தனி இடம் உண்டு.

இன்நிலையில் இன்னும் தீபாவளி பண்டிகைக்கு வெறும் 2 நாட்களே உள்ள நிலையில் செட்டி நாட்டு பலகாரங்களை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன்கோட்டை பகுதியில் இந்த பலகாரங்களை தொழில் முறையில் செய்பவர்கள் ஏராளமானோர் உள்ள நிலையில் பலகாரம் செய்யும் பணி அப்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் தேன்குழல்(முறுக்கு வகை), மசாலா முறுக்கு, கைமுறுக்கு, மாவு உருண்டை, சீப்பு சீடை, உப்பு சீடை, இனிப்பு சீடை, கார சீடை, தட்டை, லட்டு என சுமார் 16 க்கும் மேற்பட்ட பலகாரங்களை இப்பகுதி ஊழியர்கள் செய்துவரும் நிலையில் பெண்களை கொண்டே அனைத்தும் செய்யப்படுவதால் வீட்டில் செய்யப்பட்ட பலகாரங்களை போலவே சுவை மற்றும் சுகாதாரத்துடன் உள்ளது.

குறிப்பாக ஆவின் நெய்யிலேயே பலகாரங்கள் தயாரிக்கப்படுகிறது, இதனால் இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு என தனி மதிப்பும், வரவேற்பும் பொதுமக்களிடையே உண்டு.

இதனால் இப்பலகாரங்கள் உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இந்த பலகாரங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் எண்ணையை கொண்டு தயாரிப்பதால் அதிக சுவையுடன் நீண்ட நாட்களுக்கு கெட்டுவிடாமல் இருக்கிறது. எனவே இந்த பலகாரங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

What do you think?

அப்பத்தா 40% சொத்து யாருக்கு முடிவானது… யார்… யாரை போட போறாங்க தெரியலையே

உடல் உறுப்புகளை அதிவிரைவாக உரியவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான, டிரோன்