in

காலப்பட்டு சொலாரா தொழிற்சாலையை மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆளுநரிடம் மனு


Watch – YouTube Click

காலப்பட்டு சொலாரா தொழிற்சாலையை மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆளுநரிடம் மனு

 

புதுச்சேரியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலப்பட்டு சொலாரா (சாசன்) ரசாயன தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் துணைநிலை ஆளுநரிடம் மனு.

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் இயங்கி வரும் சொலாரா ரசாயன தொழிற்சாலையில் கடந்த 4-ம் தேதி பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் அதிக தீக்காயம் அடைந்தவர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சொலாரா( சாசன்) தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் துணை நிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில்….சொலாரா ரசாயன தொழிற்சாலையை சுற்றி பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், சிறைச்சாலை, மற்றும் மேலும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் தொழிலாளர்களின் இறப்புக்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சொலாரா (சாசன்)தொழிற்சாலை விபத்து குறித்து அரசியல் கட்சிகள் சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக விபத்து ஏற்பட்ட ஒரு பகுதியை மட்டும் மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைத்து 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

தீபாவளி பரிசாக சுமார் 50 லட்ச ரூபாய்