புதுச்சேரி முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம்

 

 

கரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புதுச்சேரி முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

 

புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், முதல்வர் என். ரங்கசாமிக்கு கரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

3 × three =