ஒலிம்பிக் திருவிழாவில் இருந்து பிரபல இசையமைப்பாளர் நீக்கம்

விளையாட்டுக்கே வினைவைத்த விளையாட்டு

ப்பானை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் கெய்டோ ஓமமடோ. 52 வயதான இவர், உலகம் முழுவதும் கார்னேலியஸ் என்று பெயரில் அழைக்கப்படுகிறார். வரும் வெள்ளிக்கிழமை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கும் ஒலிம்பிக் ஆரம்ப விழாவில், இவர் இசையமைப்பதாக இருந்தது.

இந்நிலையில், கார்னேலியஸ் தனது பள்ளி நாள்களில் மாற்றுத் திறனாளி மாணவரை விளையாட்டாக அடித்த சம்பவம் தொடர்பாக அப்போது வெளிவந்த பத்திரிகை செய்தி, தற்போது சமூக வலைதளங்களில் உலவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அந்த சம்பவத்துக்கு கார்னேலியஸ் வருத்தம் தெரிவிக்காததால், அவர் ஒலிம்பிக் திருவிழாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். விளையாட்டுக்கே வினைவைத்த விளையாட்டு என்று தலையில் அடித்துக் கொண்டு அவர் வெளியேறினார்.

Add your comment

Your email address will not be published.

seven − five =