வேல்ஸ் மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ!

 

வேல்ஸ் மாகாணம் முழுவதும் மலைப்பகுதிகளிலும், புல்வெளியிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இங்கு ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக தெற்கு வேல்ஸ், மத்திய, மேற்கு வேல்ஸ் கூட்டு கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் 490 அழைப்புகள் வந்திருப்பதாகவும், இதன் காரணமாக கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் தீயணைப்பு நிலைய மேலாளர் ஆலன் தாமஸ் தெரிவித்தார்.
வேல்ஸின் ஸ்வான்ஷி பகுதியில் சனிக்கிழமை காலை நேரிட்ட தீ, இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. அதை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

முதலில், கில்வி மலைப்பகுதியில் உள்ள புல்வெளியில் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் தீப்பிடிக்க தொடங்கியது. இதை 5 தீயணைப்பு வீரர்கள் சுற்றி நின்று தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இதேபோல், தெற்கு சேர்னர்போன் பகுதியில் நேரிட்ட தீ விபத்தை வெள்ளிக்கிழமை இரவு 10.20 மணிவரை 20 தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி அணைத்தனர். இதன் காரணமாக ஆங்கில்ஸி, வடக்கு வேல்ஸ் பகுதிகளில் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.
இதுகுறித்து லீ ஸ்மித் என்பவர் கூறுகையில், இங்கு நிலவிய புகை மண்டலம் நெருப்பு பிழம்பாக காட்சியளித்து. இரண்டு கால்பந்து மைதான அளவுக்கு மலைப்பகுதி தீப்பிடித்து எரிந்தது என்றார்.
இதேபோல, ரோண்டா சினோன் டாப் பகுதியின் பெர்ன்டாலே பார்க் ரோடு பகுதிக்கு மேலே ஏழு ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதையும் தீயணைப்பு படைவீரர்கள் கடுமையாக போராடி அணைத்தனர்.

Add your comment

Your email address will not be published.

four × two =