ஸ்காட்லாந்தில் 2ஆம் நிலை தளர்வுகள்

 

ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ மற்றும் மோரே பகுதிகளை தவிர பிற இடங்களில் 2ஆம் நிலை தளர்வுகள் அமலுக்கு வந்தன.

இதன்மூலம் அதிகபட்சமாக 6 பேர் உள்அரங்கில் கூடி மகிழலாம். உணவகம், மதுபான விடுதிகளின் உள்பகுதிகளில் இரவு 10.30 மணிவரை மதுபானங்கள் விநியோகிக்கப்படும். சினிமா தியேட்டர்கள், மாநாட்டு அறை, இசை கச்சேரிகள், மனமகிழ் மன்றம், பிங்கோ அறைகள் ஆகியன கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகின்றன. இதுமட்டுமன்றி, ஸ்காட்லாந்து ஆளுகைக்கு உட்பட்ட தீவுகளில் பல, நேரடியாக முதல்நிலை தளர்வுகளை அடைந்துவிட்டன. அங்கு சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம்.

Add your comment

Your email address will not be published.

2 + 1 =