இந்திய முக்கிய செய்திகள்…

* தமிழ்நாட்டுக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நேரில் உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலை, சிஏஏ உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்வைத்தார்.

* அமெரிக்காவுக்கு கல்வி நோக்கத்தில் செல்லும் இந்திய மாணவர்களுக்கு உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிதான் செலுத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

* ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்புத் தொகையை ரூ.20,706 கோடி இருப்பதாக அதிகாரபூர்வமாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிவித்தது. இது தனிநபர் மற்றும் தனியார் நிறுவன சேமிப்புத் தொகை என்றும், கருப்பு பணம் அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

* சென்னை கோட்டத்துக்குட்பட்ட பிரதான ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டு கட்டணம் மேலும் 3 மாதங்களுக்கு ரூ.50க்கு விற்பனை செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்தது.

* தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எம்எல்ஏக்களுக்கான கோவிட் பரிசோதனை இன்றுமுதல் நடைபெறுகிறது.

* புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மீன்பிடி தடைக்காலம் மற்றும் மழைக்கால நிவாரணம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை திரும்ப பெறப்படும் என முதல் அமைச்சர் என். ரங்கசாமி தெரிவித்தார்.

* சுமார் 45 நாள்கள் கழித்து காரைக்கால்} எர்ணாகுளம் விரைவுரயில் போக்குவரத்து நேற்று தொடங்கியது.

* மதுரையில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள நவீன நூலகத்துக்கா இடத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி மற்றும் கலெக்டர் அனீஷ் சேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

* மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 4 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன. அவற்றை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியில் சுகாதாரத் துறை ஈடுபட்டிருக்கிறது.

* வீடு மாறினால் செட்- டாப் பாக்சை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது.

* பாலூட்டும் தாய்மார்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்கியது.

* கோவிட் பரவலால் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ் ஆகியவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு தெரிவித்தது.

* இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக ரூ.740 கோடியை கடனாக இந்தியா வழங்கியது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், இந்த நிதியை இந்தியா அளித்தது.

* இந்தியாவில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.113 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

* கோவிட் தடுப்பூசியின் இரு டோசையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.

* சிங்கப்பூரில் இந்திய- சீன ஜோடியை இணையதளத்தில் விமர்சித்த கல்லூரி பேராசிரியர் டான் பூன் லீ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

four + one =