4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 

 

கரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், பிகார், கர்நாடகம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில முதல்வர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை தெரிவித்தார். முதல்வர்களும் தங்கள் மாநில களநிலவரத்தை பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 4,03,738 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 22 லட்சத்து 96 ஆயிரத்து 414 ஆக உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை மேலும் 4,092 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,42,362 ஆக உயர்ந்தது.

Add your comment

Your email address will not be published.

fifteen + five =