பிராந்திய அளவிலான பிரச்னைகளுக்கு தீர்வு

மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை

கரோனாவுக்கு எதிரான போரில் முதலில் பிராந்திய அளவிலான பிரச்னைக்குத் தீர்வு கண்டு, பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டுமென மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை கூறினார்.

கரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கரோனா பெருந்தொற்றை நூறாண்டுக்கு ஒருமுறை நேரிடும் பேரிடர் என குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய சூழலை எதிர்கொள்ள அரசின் அனைத்து கரங்களும் இணைந்து துரிதமாக செயல்பட்டு வருகின்றன என்றார்.
மேலும், பிராந்திய அளவிலான பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காணுமாறு அமைச்சர்களை கேட்டுக் கொண்ட அவர், பொதுமக்களுக்கு உதவி செய்து அவர்களின் கருத்துகளை கேட்டறியுமாறும் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், கடந்த 14 மாதகாலமாக கரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது

Add your comment

Your email address will not be published.

seventeen + five =