எதிர்ப்பாற்றலை தரும் கலப்பின தடுப்பூசிகள் ஆய்வில் தகவல்

கோவிட் தொற்றுக்கு எதிராக ஒரே வகை தடுப்பூசியை இருமுறை செலுத்தி வந்தாலும், மாறுபட்ட தடுப்பூசிகளை ஒன்றன் பின் ஒன்றாக செலுத்தும்போது நல்ல எதிர்ப்பாற்றல் கிடைப்பதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. எனினும், இதை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான திட்டம் ஏதுமில்லை என்று கூறிய பிரிட்டன் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி ஜோனதான் வான் டாம், விருப்பப்பட்டவர்கள் இந்த வாய்ப்பை பெற முன்வரலாம் என கேட்டுக் கொண்டார்.

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்கெல், கடந்த சில தினங்களுக்கு இருவேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

twenty − 11 =