ரஷ்யாவில் விமான விபத்து

ரஷ்யாவின் சம்சத்சா பெனிசூலா பகுதியில் இருந்து பலானா நோக்கி ஏ.என்.26 என்ற பயணிகள் விமானம் இன்று சென்றது. பலானா விமான நிலையத்தை அடைவதற்கு 10 நிமிடத்துக்கு முன்னால், கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை அந்த விமானம் இழந்தது. இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து 9 கிமீ தொலைவில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 22 பயணிகளும், 6 சிப்பந்திகளும் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் நிலை குறித்து உடனடியாக தகவல் கிடைக்கவில்லை. மீட்புப் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

Add your comment

Your email address will not be published.

two × 4 =