முன்னாள் தலைமை ஆலோசகருக்கு அமைச்சர்கள் கண்டனம்

பிரதமரின் நன்கொடை விவகாரம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முன்னாள் தலைமை ஆலோசகருக்கு மூத்த அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கமாக இருந்தவர் டொமினிக் கம்மிங்க்ஸ். போரிஸ் ஜான்சனின் அரசில் மூத்த அமைச்சர்களுக்கு நிகரான பதவியில் இருந்த அவர், உள்கட்சி அதிகார மோதல் காரணமாக கடந்த ஆண்டு பதவி விலக நேர்ந்தது. பிரதமர் போரிஸ் ஜான்சனை நீண்ட காலமாக விமர்சித்து வரும் டொமினிக், அண்மையில் சமூக வலைதளத்தில் அவருக்கு எதிராக பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், பிரதமர் தனது அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்காக நன்கொடையாளர்களிடமிருந்து ரகசியமாக நிதி பெற திட்டமிட்டிருந்ததாகவும், இது நெறிமுறையற்ற, முட்டாள்தனமான முடிவு என்றும், அப்பட்டமான விதிமீறல் என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், பிரதமரின் திறனையும், ஒருமைப்பாட்டையும் கேள்வி எழுப்பி, பதிவுகளை வெளியிட்டார்.

அவரது இந்தக் கருத்து அரசியல் அரங்கில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், டொமினிக் கம்மிங்க்ஸýக்கு கண்டனம் தெரிவித்துள்ள மூத்த அமைச்சர்கள், எல்லா நேரங்களிலும், அரசும், அமைச்சர்களும் நன்னடத்தை விதிகளுக்கும், தேர்தல் சட்டத்திட்டங்களுக்கும் உட்பட்டுதான் செயல்படுகின்றனர். கேபினெட் அலுவலக அதிகாரிகளுக்கு அனைத்தும் தெரிவிக்கப்பட்டு, அலுவல்பூர்வ ஆலோசனைகள் கோரப்படுகின்றன. தேர்தல் நடத்தை விதிகளின்படி, நன்கொடைகள் அனைத்தும் தேர்தல் கமிஷனிடமும், பாராளுமன்ற பொது அவை பதிவாளரிடமும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுவிட்டன என்று கூறினர்.

Add your comment

Your email address will not be published.

12 − 7 =