in

அரசு பள்ளியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திடீர் ஆய்வு


Watch – YouTube Click

அரசு பள்ளியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திடீர் ஆய்வு

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் கொணலூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கிராம பொதுமக்களின் சார்பில் கும்ப கலசங்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

திருக்கோவிலின் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள மூலவர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் சாமியை பக்தியுடன் வணங்கினார்.

பின்னர் கோவிலில் இருந்து திரும்பி செல்லும் வழியில் கொணலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடத்தில் கற்றல் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்..

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் இந்த பள்ளி வகுப்பறைக்கு சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாணவ மாணவிகளிடத்தில் கற்றல் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

‘மேலும் பள்ளியில் பயிலக்கூடிய மாணவ மாணவிகள் ஆசிரியர்களின் சொல் பேச்சை கேட்டும், தினமும் ஆசிரியர்கள் நடத்தும் அனைத்து பாடங்களையும் கேட்டு புரிந்து படிக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் சொல்படி நடக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சுபா குமார்,பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் ஸ்டான்லி பிராங்க்ளின், கொணலூர் ஸ்ரீதர்,நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை, செல்வமணி, செந்தில், ஆகியோர் உடனிருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

பள்ளி கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்

முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்