கோவிட் கால கோடீஸ்வரர்கள்!

கோவிட் பெருந்தொற்றால் உலக பொருளாதாரமே முடங்கியதால், ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மேலும் ஏழைகளாயினர். ஒருவேளைக்கு சோற்றுக்கு கூட ஏராளமானோர் திண்டாடுகின்றனர். அதேவேளையில், பங்குச் சந்தையும், ரியல் எஸ்டேட் தொழிலும் செழித்து வளர்ந்ததால், கோடீஸ்வரர்கள் காட்டில் மழை தான் என்றால் அது மிகையல்ல. ஆம், இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோதிலும், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கோவிட் பரவலுக்கு முன்பாக 50 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, தற்போது 5 கோடியே 61 லட்சமாக அதிகரித்திருக்கிறது. கிரெடிட் சூஸி எனும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

7 + 11 =