சீனாவின் வூஹான் ஆய்வகம் ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட்டது

முன்னாள் அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ பரபரப்பு குற்றச்சாட்டு

கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் நகரிலுள்ள வைரஸ் ஆய்வகத்தில் இருந்து திட்டமிட்டு பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை ஆமோதித்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கரோனாவை சீன ப்ளூ என்றே வர்ணித்தார். தற்போது, கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்தே மனிதர்களுக்கு பரவியதாகவும், அந்த ஆய்வகம் ஆராய்ச்சி மட்டுமன்றி, ராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக டிரம்பின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மைக் பாம்பியோ தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளை ஆய்வு நடத்துவதற்காக சீனாவுக்குள் அந்நாடு நுழைய விடவில்லை என்றும் அவர் கூறியிருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் விவாத பொருளாக மாறியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

thirteen + 14 =