அமெரிக்காவில் அகதிகள் முகாமில் கொடூரம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஃபோர்ட் பிலிஸ் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்கா} மெக்ஸிகோ எல்லையை கடந்து இவர்கள் இங்கு தஞ்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த சிறுமிகள் அங்குள்ள ஊழியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதும், அவர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டு வருவதும், முகாமில் கோவிட் பரவல் அதிகரித்து வருவதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அகதிகள் முகாமில் நடைபெறும் கொடுமைகளை அதிபர் ஜோபிடன் நிர்வாகம் கண்டும்காணாமலும் இருப்பதுதான் இதுபோன்ற கொடூரச் செயலுக்கு காரணம் என சிலர் கருத்து தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

1 + 10 =