in

தஞ்சையிலிருந்து புறப்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண பொருட்கள்


Watch – YouTube Click

தஞ்சையிலிருந்து புறப்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண பொருட்கள்

 

சென்னையில் மிக் ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மருந்து பொருட்கள், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சென்னை மாநகராட்சி புழுதிவாக்கம் நிவாரண மையத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் , திருவையாறு, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், உள்ளிட்டவர்கள் 6 லாரிகளில் அனுப்பி வைத்தனர்:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த தொடர் கன மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தண்ணீரால் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்களால் வழங்கப்பட்ட 61 லட்சம் ரூபாயிலான அரிசி, பருப்பு, பிரட், பிஸ்கட், நாப்கின், மெழுகுவர்த்தி, மருந்து பொருட்கள், மளிகைப் பொருட்கள், பாய், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 6 லாரிகள் மூலம் புழுதிவாக்கம் நிவாரண மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்..


Watch – YouTube Click

What do you think?

ஃபோர்ப்ஸ் பட்டியலில் 4 இந்தியர்கள்

யாரை வேணா கல்யாணம் பண்ணலாம், நடிகரை மட்டும் கல்யாணமே பண்ண கூடாது