மெக்சிகோவில் மெட்ரோ ரயில் விபத்து: 24 பேர் பலி

 

 

மெக்சிகோவில் திங்கள்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு நிகழ்ந்த மெட்ரோ ரயில் விபத்தில், குழந்தைகள் உள்பட 24 பேர் பரிதாபமாக பலியாகினர்.

 

மெக்சிகோ நகரின் ஓலிவாஸ் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் சென்றபோது அதன் பாலம் இடிந்து விழுந்ததில், இரண்டு ரயில் பெட்டிகள் அந்தரத்தில் தொங்கின. இதில், சிக்கி 65 பேர் பலத்த காயமடைந்தனர். 7 பேர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மெட்ரோ ரயிலின் பகுதிகள் பெயர்ந்து விழுந்ததில், பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த கார் அப்பளம்போல் நொறுங்கியது. அதில் இருந்த ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டார்.

மெக்சிகோவில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மிகப் பெரிய விபத்து இது என்று கூறிய அந்நகர மேயர் கிளவ்டியா ஷெய்ன்பாம், ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

Add your comment

Your email address will not be published.

sixteen − nine =