பத்திரிகையாளர்களை சந்திப்பது போரை சந்திப்பது போல் உள்ளது
ஆளுநருக்கு முதல்வருக்கும் நல்ல நட்பு தேவை… சில நேரங்களில் தர்மயுத்தமே நடக்கிறது.. பத்திரிகையாளர்களை சந்திப்பது போரை சந்திப்பது போல் உள்ளது..
தமிழிசை பேச்சு…
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தேசிய பத்திரிகையாளர் தின விழா இன்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை மூத்த பத்திரிகையாளர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊடகவியலாளர்கள் இல்லாமல் அரசும் இல்லை ஆட்சியும் இல்லை. முதல்வருக்கும் ஆளுநர்களுக்கும் நல்ல நட்பு இருக்க வேண்டும். சில நேரங்களில் தர்மயுத்தம் நடக்கிறது.
அப்படி இல்லாமல் ஊடகவியலாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நல்ல நட்பு இருக்க வேண்டும். சில நேரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது போருக்கு செல்வது போல் உள்ளது என குறிப்பிட்டார்.
பத்திரிக்கையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நல்ல உறவு இருக்க வேண்டும். மாமியாரும் மருமகளும் எப்படி இருக்கிறார்கள்.. எனக்கு மாமியாரும் மருமகளும் கலகலப்பாக இருக்கிறார்களா… எனக்கொருவர் கேட்டதற்கு கைகலப்பாக இல்லை..கைகலப்பாக இருக்கிறார் என்று பதில் கூறி இருக்கிறார்கள்.
.கலகலப்பாக இருக்க வேண்டியது சில நேரங்களில் கைகலப்பாகி விடுகிறது.குடும்பத்தை போல சில நேரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பும் அப்படி ஆகிவிடுகிறது என தமிழிசை கூறினார்.
மருத்துவராக இருந்தபோது இரண்டு கிளினிக்கில் வைத்து இருந்தேன். 15 மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை அளித்து வந்தேன். உதவி பேராசிரியராக இருந்தேன். இப்பொழுது எப்படி பிசியாக இருக்கிறேனோ அப்பொழுதும் பிசியாகவே இருந்தேன்.
இரவு ஒரு மணி வரை கிளினிக்கை சிகிச்சை அளித்து வந்திருந்தேன். சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டுமென தான். அரசியலுக்கு வந்தேன். சில தேவைகளுக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்கள் பணியாற்றுவேன் என தான் இரண்டு மாநிலங்களை நம்பி மத்திய அரசு என்னிடம் கொடுத்திருக்கின்றது என்றும் தமிழிசை தெரிவித்தார்.