லிவர்பூல் நகர மேயர் பதவியை தக்கவைத்துக் கொண்டது தொழிலாளர் கட்சி

 

கருப்பின பெண் மேயரானார்

 

இங்கிலாந்தின் லிவர்பூல் நகர பிராந்திய மேயர் பதவியை தொழிலாளர் கட்சியின் ஸ்டீவ் ரோத்தரம் தக்கவைத்துக் கொண்டார். இத்தொகுதியில் 66,702 வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பை அவர் தட்டிச் சென்றார். இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் 58 சதவீதத்தை அவர் பெற்றிருக்கிறார். இதுகுறித்து ஸ்டீவ் கூறுகையில், அதிகாரப் பரவலுக்கும், நான் இதுவரை லிவர்பூலில் செய்த நற்பணிகளுக்கும் மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இந்த வெற்றி என்றார்.

இத்தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஜேட் மார்ஸ்டென் 40,211 வாக்குகளும், லிபரல் டெமோக்ரேட்ஸ் கட்சி வேட்பாளர் 35,049 வாக்குகளும் பெற்றனர்.

 

லிவர்பூல் நகர பிராந்திய மேயர் பதவியை மட்டுமன்றி, நகர மேயர் பதவியையும் தொழிலாளர் கட்சி தட்டிச் சென்றது. அந்த வகையில், லிவர்பூல் நகர மேயராக ஜோனி ஆன்டர்சன் என்கிற கருப்பின பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பிரின்சஸ் பார்க் வார்டில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக பதவி வகித்து வந்தார். தற்போது மேயராக தேர்வாகியிருக்கிறார். இங்கிலாந்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் கருப்பின பெண் அமர்வது இதுவே முதல்முறை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

thirteen − seven =