முகக் கவசம் தனிமனித விருப்பம்

பிரிட்டன் அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இங்கிலாந்தில் ஜூலை 19ஆம் தேதி கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டாலும், தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவதை தளர்த்தக் கூடாது என டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாஸ்க் அணிவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் அளித்த பேட்டியில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், மாஸ்க் அணிவதா, வேண்டாமா என்ற இரண்டு விருப்பத்தில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்வதாக இருந்தால், தான் மாஸ்க் அணிய கூடாது என்பதை தான் தெரிவு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

Add your comment

Your email address will not be published.

2 × three =