சிட்னியில் வீட்டியிலும் முகக் கவசம் அணிய வேண்டும்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டெல்டா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், வீட்டிலும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டுமென கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. 50 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட சிட்னி மாநகரில், கடந்த புதன்கிழமை மட்டும் 16 பேருக்கு டெல்டா தொற்று உறுதியானது. இதுவரை 37 பேருக்கு டெல்டா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, எக்காரணம் கொண்டும் சிட்னியை விட்டு வெளியேற வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்திய அதிகாரிகள், பொது நிகழ்ச்சிகள் பங்கேற்பதையும் அறவே தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

Add your comment

Your email address will not be published.

4 × three =