அருண்டெல் காஸ்டில் கோட்டையில் விலைமதிப்பற்ற கலைபொருள்கள் திருட்டு

 

இங்கிலாந்தின் வெஸ்ட் சசெக்ஸ் பகுதியில் உள்ளது அருண்டெல் காஸ்டில் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை. இங்கு விலைமதிப்பற்ற பழங்கால பொருள்கள், இங்கிலீஷ் இளவரசர்களும், இளவரசர்களும் பயன்படுத்திய அரியவகை பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டிருந்த இந்தக் கோட்டை, கடந்த மே 18ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கோட்டை திறக்கப்பட்ட அடுத்த நாளே அங்கிருந்த விலைமதிப்பற்ற கலைபொருள்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

ஸ்காட்லாந்தின் இளவரசி மேரி கடந்த 1587ஆம் ஆண்டில் பயன்படுத்திய தங்க ஜெபமாலை மணிகள், ஏர்ல் மார்ஷலுக்கு அவர் பரிசாக அளித்த விலையுயர்ந்த கோப்பைகள் ஆகியன திருடப்பட்டிருப்பது கோட்டை ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

17 + 19 =