இனி திருமண சான்றிதழில் தாயாரின் பெயரும் இடம்பெறும்

 

 

இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகளில் இனி திருமணச் சான்றிதழில் மணமக்களின் தாயார் பெயரும் இடம்பெறும் வகையில், திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போதைய நடைமுறையின்படி, திருமணச் சான்றிதழில் மணமக்களின் தந்தை பெயர் மட்டுமே இடம்பெறுகிறது. இதில், இருவரது தாயார் பெயரும் இடம்பெறும் வகையில், திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் வரலாற்று ரீதியான சீரற்ற தன்மையை சரிசெய்யும் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த நடைமுறை பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்தில் அமலில் இருக்கிறது. தற்போது இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

14 − ten =