ஐரோப்பாவில் 22 பேருக்கு கரோனா பரப்பியவர் கைது

ஸ்பெயினில் 3 வயது குழந்தை உள்பட 22 பேருக்கு கரோனா நோய்த்தொற்றை பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.

ஸ்பெயின் மஜோர்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் 40 வயது நபருக்கு கடந்த சில தினங்களாக சளி, இருமல் இருந்து வந்தது. மேலும், அவரது உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மேல் இருந்ததால், அவரை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு சக ஊழியர்கள் அறிவுறுத்தினர். இதை ஏற்க மறுத்த அவர், மாஸ்க்கை கழற்றி வைத்துவிட்டு ‘உங்களுக்கு கரோனா தொற்றை பரப்ப போகிறேன்’ என குறும்புக்காரத்தனமாக அவர்களை நோக்கி தும்மவும், இருமவும் ஆரம்பித்தார்.
பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்ட அவர், அதன்பின்னரும் வீட்டில் இருக்காமல் தொடர்ந்து அலுவலகத்துக்கும், ஜிம்முக்கும் சென்றுவந்தார். விளைவு, பி.சி.ஆர். சோதனை முடிவில் யில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இது மட்டுமன்றி, அலுவலகத்தில் 5 பேர், ஜிம்மில் 3 பேர், தனது வீட்டில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 14 பேர் என மொத்தம் 22 பேர், இவர் ஒருவரால் கரோனா தொற்றுக்குள்ளாகினர்.

இதை மிகவும் தீவிரமாக கருதிய காவல் துறை, அந்த நபரை கைது செய்தது.

Add your comment

Your email address will not be published.

five + four =