அமெரிக்காவில் ஓடும் விமானத்தில் இருந்து கீழே குதித்தவரால் பரபரப்பு

அமெரிக்காவில் உள்ளூர் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.10 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சால்ட் லேக் சிட்டி நோக்கி ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யூனிடைட் எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. விமானம் ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த போது, அதில் பயணித்த ஒருவர் திடீரென இருக்கையை விட்டு எழுந்து, “காக்பிட்’ நோக்கி வந்தார். திடீரென எமர்ஜென்சி கதவை திறந்த அந்த நபர், விமானத்தில் இருந்து கீழே குதித்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள், விமானிக்கு தகவல் அளித்தனர். இதன்பின்னர் மீண்டும் விமானம், புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தது. இதனிடையே, அந்த நபர் ஓடுதளத்தில் காயங்களுடன் அலறி துடித்ததால், அவரை விமான நிலைய ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என தெரியவில்லை. அமெரிக்காவில் இதுபோன்று இந்த ஆண்டில் 3 ஆயிரம் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Add your comment

Your email address will not be published.

fourteen − 1 =