காவல் நிலையத்துக்கு தீ வைத்தவருக்கு 12 மில்லியன் டாலர் அபராதம்

ஜார்ஜ் பிளாய்ட் விவகாரம்

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் கடந்த ஆண்டில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், வெள்ளை இன போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்டார். ஜார்ஜ் பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்துப் பகுதியில் தனது காலால் 9 நிமிடங்கள் மூர்க்கத்தனமாக அந்த அதிகாரி அழுத்தியதும், என்னால் மூச்சுவிட முடியவில்லை (ஐ கான்ட் ப்ரீத்) என்று அவர் கதறியதும் சமூக வலைதளங்களில் வெளியாகி, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கரோனா பரவலுக்கு மத்தியிலும் ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தைக் கண்டித்து, அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெற்றன. அந்தவகையில், மினபொலிஸ் நகரில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக மினிசொட்டா நகரை சேர்ந்த டைலன் சேக்ஷ்பியர் ராபின்சன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், அவருக்கு 12 மில்லியன் டாலர் அபராதம் விதித்ததுடன், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. எஞ்சிய 3 பேர் மீதான தண்டனை விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. அபராத தொகையை செலுத்தும் அளவுக்கு ராபின்சன் வசதிபடைத்தவர் அல்ல என அவர் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

eighteen − seven =