அமெரிக்காவில் புலியுடன் சுற்றித் திரிந்தவர் கைது

 

 

ஹூஸ்டனை சேர்ந்த 26 வயது இளைஞர் விக்டர் குவாஸ். ஏற்கெனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், விக்டர் புலிக்குட்டி ஒன்றுடன் சுற்றித் திரிவதாகவும், இதனால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

இதன்பேரில், காவல் துறையினர் அங்கு வந்தபோது புலியை காரில் ஏற்றி விக்டர் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறை, விசாரித்து வருகிறது.

இதுகுறித்து போலீஸ் கமாண்டர் ரோன் போஸ்ரா கூறுகையில், புலியை பாதுகாப்பாக பராமரிக்க எங்களிடம் நிறைய இடம் இருக்கிறது. அந்த புலி வீதிகளில் சுற்றித் திரிந்து பொதுமக்களின் உடைமைகளுக்கு சேதம் விளைவித்திருந்தால், அது கண்டிப்பாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும். ஏனென்றால், இப்பகுதியில் ஏராளமானவர்களிடம் துப்பாக்கி இருக்கிறது. இந்த தவறுக்கு புலி காரணம் அல்ல, அதை வளர்த்தவர்தான் பொறுப்பு. புலி வீதியில் சுற்றித் திரிவதை ஏற்றுக் கொள்ள இயலாது என்றார்.

Add your comment

Your email address will not be published.

10 − 4 =