தாயை கொன்று தின்ற படுபாதகன் கைது

ஸ்பெயினில் கொடூரம் 

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரை சேர்ந்த 28 வயது இளைஞர் ஆல்பெர்ட்டோ கோமஸ். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் தனது தாயாரை கொலை செய்து சடலத்தை 2 வாரங்களாக வைத்திருந்து பிய்த்து பிய்த்து தின்றார். இதனால், அவரை கைது செய்த காவல் துறையினர் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இறுதிகட்ட விசாரணையின்போது, சம்பவம் நடந்த காலகட்டத்தில் தான் பித்துப்பிடித்திருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த கொடிய செயலை அரங்கேற்றியதாகவும் கோமஸ் தெரிவித்தார். ஆனாலும், இதை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது சகோதரருக்கு 60 ஆயிரம் பவுண்ட் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டார்.

Add your comment

Your email address will not be published.

14 + four =