மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு பின்னடைவு

 

 

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில், 106 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங். கட்சி முன்னிலை வகிக்கிறது. பாஜக 97 தொகுதிகளில் முன்னிலை வகித்து, மம்தாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலை வகிக்கிறார். தபால் வாக்குகளின் அடிப்படையிலேயே சுவேந்து அதிகாரி முன்னிலை வகிப்பதாகவும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கணக்கிடும்போது, உண்மை நிலவரம் தெரியவரும் என்றும் திரிணமூல் காங். நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

two × 2 =