பயணக் கட்டுப்பாடு: “மால்டா பல்டி”

மால்டா தீவுக்கு எளிதில் செல்லும் வசதி

இயற்கை எழில் கொஞ்சும் இங்கிலாந்தின் அண்டை நாடான மால்டா தீவை நோக்கி, கோடைக் காலங்களில் பிரிட்டன்வாசிகள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக படையெடுப்பது வழக்கம். இந்நிலையில், பிரிட்டனில் இருதவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதிலும் தேசிய சுகாதாரத் துறை பிறப்பிக்கும் சான்றிதழை வைத்திருந்தால் மட்டுமே மால்டா தீவுக்குள் அனுமதிக்கப்படுவர் என அந்நாடு சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி, தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான அத்தாட்சியை செல்போன் ஆப் வாயிலாக காண்பித்தாலே போதும் என மால்டா தீவு அறிவித்துவிட்டதாக பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்தார். மால்டா தீவை கடந்த புதன்கிழமை பச்சைப் பட்டியலுக்கு பிரிட்டன் மாற்றினாலும், அதற்கு முன்பாக அங்கு செல்ல திரளானோர் டிக்கெட் புக்கிங் செய்ய முயன்றது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

13 + 10 =