தலைமை மருத்துவ அதிகாரியை கலாய்த்த இளைஞர்கள்

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி சமீபத்தில் லண்டன் ஜேம்ஸ் பூங்காவில் வாக்கிங் சென்றபோது, இரண்டு இளைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்போனில் படம்பிடித்து கலாய்க்க தொடங்கினர். அரசின் உயர் அதிகாரி இவ்வாறு இளைஞர்களின் “கலாய்’க்கு ஆளானது, அரசு வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இளைஞர்களின் செயலுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன், உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல், சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவீது ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கிறிஸ் விட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Add your comment

Your email address will not be published.

nineteen − one =