in

11 நாட்கள் காட்சியளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு


Watch – YouTube Click

11 நாட்கள் காட்சியளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு

 

கொட்டும் மழையிலும், கடுங் குளிரிலும் 11 நாட்கள் காட்சியளித்தமகாதீபம் நேற்றுடன் நிறைவு... 2,668 அடி உயரமுள்ள தீப மழையில் ஜோதிப் பிழம்பாய்காட்சி கொடுத்த அண்ணாமலையார்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17- ஆம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களும்பஞ்சமூர்த்திகள் மாட வீதிகளில் பவனி வந்துபக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கடந்த மாதம் 26-ம்தேதிஅதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறையில்பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்குகோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்டமலைமீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியின் மீது மாலை 6 மணிஏற்றப்பட்டு வந்தது. குறிப்பாக இந்த வருடம் தொடர்மழையிலும், கடுங் குளிரிலும் மகாதீபம் மலை உச்சி மீது தொடர்ந்துஎரிந்து கொண்டு வந்தது.

இந்த நிலையில் நிறைவு நாளான நேற்று மகாதீபம்2,668 அடி உயரமுள்ள மலை மீது ஏற்றப்பட்டது. நிறைவுநாள் என்பதால் ஆன்மீக பக்தர்கள் தங்கள் இல்லங்களில்விளக்கு ஏற்றி மலையின் மீது ஜோதிப் பிழம்பாய் காட்சிகொடுத்த அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். நகரி வாத்தியமும் சங்கொலி முழங்கவும் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்திமுழக்கங்கள் எழுப்பி ஜோதி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இன்று காலை (07.12.23) மலைமீது இருந்துகோயிலுக்கு மகா தீப கொப்பரை கீழே வர வைக்கப்பட்டுபின்பு இன்று மாலை கொப்பரைக்கு பூஜை செய்து பின்பு தீபமை ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜப்பெருமானுக்குசாற்றிய பின் ஆன்மீக பக்தர்கள் மற்றும் நெய் காணிக்கைசெலுத்தி அவர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும்என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கும் காவலர் குவியும் பாராட்டு

ரேசன் அரிசி மூடைகள் கடத்திய வாலிபர் கைது