சிதம்பரம் அருகே கூத்தன்கோயில் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது
சிதம்பரம் அருகே உள்ள கூத்தன்கோயில் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்தது.
பின்னர் கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து விமான கும்பாபிஷேகம் நடந்தது. ஆச்சாரியார்கள் கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் மூலஸ்தானத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.