கொணலூர் தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
செஞ்சி ஒன்றியம் கொணலூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் கொணலூர் கிராமத்தில் புதியதாக ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று காலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது .
இதை முன்னிட்டு நேற்று 16ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மங்கல இசையுடன் விக்னேஸ்வர பூஜையும், மகா கணபதி ஹோமமும், நவகிரக ஹோமமும்,முதல் கால பூஜை, மகா தீபாரதனையும் நடைபெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும், நவகிரக ஹோமமும்,மகா தீபாராதனை நடைபெற்றுது.
இதனைத் தொடர்ந்து மகா யாக பூஜைகள் செய்யப்பட்டு கலசங்கள் மேளதாளங்கள் முழுங்க பக்தர்கள் பூக்கள் தூவி திருக்கோவில் கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கோபுரங்களில் அமைந்துள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கோபுரங்களில் இருந்து தீபாராதனை காட்டப்பட்டது அப்பொழுது பக்தர்கள் சாமியே ஐயப்பா… சாமியே ஐயப்பா… என கோசங்கள் எழுப்பி வழங்கினார்.
தொடர்ந்து திருக்கோவிலில் அமைந்துள்ள பாலகணபதி, பாலமுருகன், கருப்பண்ண சுவாமி , மஞ்சமாதா,ஐயப்பன் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனையுடன் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் கொணலூர் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கொணலூர் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
மேலும் கார்த்திகை மாதம் முதல் தேதி என்பதால் கிராம இளைஞர்கள் ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஐயப்பன் மாலை அணிவித்து இருந்தனர்…