அலங்கார காந்தத்துக்கு தடை 

தேசிய சுகாதார சேவைகள் துறை வேண்டுகோள்

சிறிய அளவிலான ‘நியோடைமியம்’ என்று அழைக்கப்படும் அலங்கார காந்தத்தை நாக்கின் இருபுறமும் வைத்து, நாக்கில் துளையிட்டதை போல் உணர்வை ஏற்படுத்தும் வீடியோக்கள் ஆன்லைனில் பெருகிவருகின்றன. இவ்வாறு விளையாட்டாக செய்யும்போது தப்பித்தவறி சிலருக்கு காந்தம் வயிற்றுக்குள் சென்றுவிடுகிறது. அந்த வகையில், இங்கிலாந்தில் கடந்த 3 ஆண்டுகளில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காந்தங்கள் வெளியே எடுக்கப்படுகின்றன.

எனவே, விளையாட்டாக ஆரம்பித்து கடைசியில் உயிருக்கே உலைவைக்கும் சிறிய அளவிலான காந்தத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டுமென தேசிய சுகாதார சேவைகள் துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், நியோடைமியம் அல்லது சூப்பர் ஸ்ட்ராங்க் என்ற அரியவகை காந்தங்கள், பொம்மை, அலங்கார பொருள்களின் வரிசையில் விற்கப்படுகின்றன. இன்றைய நாள்களில் அவை அதிக அளவில் வியாபாரமாகின்றன. பழங்கால காந்தத்தை விட இந்த சூப்பர் ஸ்ட்ராங்க் காந்தங்கள் வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் ஈர்ப்புத் தன்மையில் வலிமை மிக்கவை. விழுங்குவதற்கும் எளிதானவை. எனவே இதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

16 − 14 =