பின்னணி பாடகர் நிக் காமென் மறைவு: மடோனா உருக்கம்

 

 

பின்னணி பாடகரும், நடிகருமான நிக் காமென் மறைவுக்கு பிரபல நடிகை மடோனா இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

பின்னணி பாடகர் நிக் காமென் உடல்நலக் குறைவால் இந்த வாரம் தனது 59ஆவது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், பிரபல நடிகை மடோனா வெளியிட்ட இரங்கல் குறிப்பில், நீங்கள் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டீர்கள் என்பதை உணரும்போது இதயம் நொறுங்குகிறது. நீங்கள் எப்போதும் இரக்க குணமுள்ள, இனிமையான மனிதனாக இருந்தீர்கள். நிறைய பாதிக்கப்பட்டீர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் மகிழ்வாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மடோனாவுக்கு ஹிட் கொடுத்த ஈச் டைம் ஐ நீட் யூ உள்ளிட்ட திரைப்படங்களில் நிக் காமென் பணியாற்றியது நினைவுகூரத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

two × 1 =