ஓராண்டில் முடங்கிய மதுபான விடுதி, உணவகங்கள்

 

பிரிட்டனில் ஓராண்டு கழித்து திங்கள்கிழமை (மே 17) மதுபான விடுதிகள், உணவகங்கள் திறக்கப்படுகின்றன. இந்தப் பொதுமுடக்க காலத்தில் ஆயிரக்கணக்கான மதுபான விடுதிகளும், உணவகங்களும் நிதி நெருக்கடி காரணமாக முடங்கி போனது தெரியவந்துள்ளது.

அந்த வகையில், பிரிட்டன் முழுவதும் 9.7 சதவீத உணவகங்கள் நிதி நெருக்கடி காரணமாக மீண்டும் தொழிலை நடத்த இயலாமல், மூடப்படுகின்றன. குறிப்பாக வேல்ஸ் மாகாணத்தின் நியூபோர்ட்டில் செயல்பட்டுவரும் பிரபல ஆஸ்கர் உணவகம் கரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் மூடுவிழாவை சந்தித்திருக்கிறது. பின்தங்கிய இந்த பகுதியில் உணவகத்தை கட்டமைப்பதற்காக ஆயிரக்கணக்கான பவுண்டுகளை உணவக உரிமையாளர் ஆஸ்கரும், அவரது மனைவியும் முதலீடு செய்திருந்தனர். பொதுமுடக்கம் காரணமாக அந்நிறுவனம் தற்போது பெரும் பொருள் இழப்பை சந்தித்து நலிவடைந்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்கர் கூறுகையில், எங்களுக்கு மிகவும் அன்பான வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருந்தனர். ஆனால், கரோனா எங்களை கடுமையாக பாதித்துவிட்டது. கிறிஸ்துமஸ் விடுமறையில் வியாபாரம் சூடுபிடிக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். அற்குள் எனது மனைவிக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டதால், உணவகத்தை மூட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானோம். காரணம், அரசு தரும் நிவாரணத்தை வைத்துக் கொண்டு எங்களால் உணவகத்தை மேற்கொண்டு நடத்த இயலாது என்றார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான ஆஸ்கர், உணவக தொழில் நஷ்டம் காரணமாக தற்போது ஆயிரக்கணக்கான பவுண்ட் கடனில் இருக்கிறார். இந்த இடரிலிருந்து மீள மாற்று தொழிலை தேடிவருகிறார்.

Add your comment

Your email address will not be published.

1 × 5 =