ஒரு முத்தத்தில் அமைச்சர் பதவியை இழந்த மேத்யூ வேண்டுமென்றே சிக்க வைத்தது அம்பலம்

சுகாதாரத் துறை அமைச்சர் மேத்யூ ஹான்காக் தனது உதவியாளர் கீனாவுக்கு அலுவலகத்தில் வைத்து முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர் அமைச்சர் பதவியை இழந்தார். இங்கிலாந்தில் ஒரே முத்தத்தில் அமைச்சர் பதவியையே இழக்க நேர்ந்தது உலகம் முழுவதும் விவாத பொருளாகியது. இந்நிலையில், அவரை காட்டிக் கொடுத்த அந்த சிசிடிவி கேமரா, அந்த இடத்தில் பொருத்தப்பட வேண்டியதில்லை என்பதும், அது ஏற்கனெவே அலுவலக வாயிலில் பொருத்தப்பட்டிருந்ததும், அமைச்சரை கவிழ்க்க வேண்டும் என்ற சதித் திட்டத்தில் அதை அமைச்சரின் அலுவலக உள் பகுதியில் இடமாற்றி, அவரது பதவிக்கு மர்ம நபர்கள் உலை வைத்ததும் தெரியவந்துள்ளது. இதனால், தனக்கு கீழ் வேலைபார்த்த அலுவலர்களின் மீது கடும் கோபத்தில் மேத்யூ ஹான்காக் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Add your comment

Your email address will not be published.

7 + 8 =