லண்டனில் ஊதிய உயர்வு கோரி டியூப் ரயில் டிரைவர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஜூனியர் டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்து அடியோடு முடங்கி விட்டது. டியூப் ரயில் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் நிலையங்கள் ஆங்காங்கே வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த போராட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் பங்கேற்கின்றனர்.
பள்ளிக்கூட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பெரும்பாலான பள்ளிகள் இன்று மூட ப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள து. பிரிட்டன் நிதி அமைச்சர் ஜெரிமி ஹண்ட் இன்று பிரிட்டன் நிதிநிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த சூழ்நிலையில் அரசு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் அரசு பணி ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings