பொதுமுடக்கத்தால் குழந்தைகளின் பேச்சு, மொழித்திறனில் பாதிப்பு

ஆய்வில் தகவல்

பிரிட்டனில் கடந்த ஆண்டில் கரோனாவை கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், குழந்தைகளின் பேச்சு, மொழித்திறனில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தில் ஏறத்தாழ 50 ஆயிரம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 4 முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் தகவல் பரிமாற்றத் திறன் பொது முடக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதும், அவர்களுக்கு மொழித்திறனை மேம்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதும் ஊர்ஜிதமாகியுள்ளது. எஜூகேஷன் என்டோவ்மெண்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வு, கரோனாவை எதிர்கொள்ள அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், பிள்ளைகளின் சமூக தொடர்பையும், பேச்சுத் திறனை வளர்த்தெடுக்கக்கூடிய முக்கிய காரணியான அனுபவத்தையும் ஒடுக்கிவிட்டது என குறிப்பிடுகிறது.

தாத்தா, பாட்டிகள் உடனான குறைவான தொடர்பு அல்லது தொடர்பற்ற நிலை, சமூக இடைவெளி, வெளியில் விளையாட செல்ல அனுமதி மறுப்பு, பொது இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிதல் போன்ற காரணிகளால் குழந்தைகளின் தகவல்தொடர்புத் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, குறைவான பேச்சுத் திறன் வளர்ச்சி பிள்ளைகளின் கற்றலில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஏராளமான ஆய்வின்மூலம் உறுதியாகியிருக்கிறது. பிள்ளைகளின் ஆரம்ப கல்வியில் அவர்களை மேம்படுத்துவதற்காக ஆண்டுக்கு 18 மில்லியன் பவுண்ட் நிதியை அரசு செலவிடுகிறது.

இங்கிலாந்தில் 58 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விவரம் வருமாறு;

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் பள்ளிக்கல்வியை தொடங்கிய குழந்தைகளுக்கு அதிக ஆதரவும், அரவணைப்பும் தேவை என 76 சதவீதத்தினர் குறிப்பிடுகின்றனர். பிள்ளைகளின் பேச்சு மற்றும் மொழித்திறன் வளர்ச்சியில் கவலைகொள்வதாக 96 சதவீத பெற்றோர் குறிப்பிடுகின்றனர். மேலும், தொடர் பொதுமுடக்கம், கோடைக்காலம் காரணமாக பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியை நினைத்து கவலைகொள்வதாக 56 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

two × two =