சிட்னியில் ஜூலை 2ஆம் தேதி வரை ஊரடங்கு

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வெள்ளிக்கிழமை மேலும் 17 பேருக்கு இந்தியாவில் உருமாறிய டெல்டா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், சிட்னியில் பாதிப்பின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. எனவே, சிட்னியில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், சனிக்கிழமை முதல் ஜூலை 2ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பருக்குப் பிறகு பெரிய நகரம் ஒன்றில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Add your comment

Your email address will not be published.

twelve + 6 =