டெல்லியில் பொதுமுடக்கம் நீட்டிப்பு

 

டெல்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாலும், பொதுமுடக்கத்தை மேலும் ஒரு வாரகாலம் நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மே 10ஆம் தேதி வரை டெல்லியில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுள்ளது.
டெல்லிக்கு இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் சப்ளை செய்யப்பட்டிருப்பதாகவும், வரும் திங்கள்கிழமையில் இருந்து 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், தடுப்பூசி பெற விண்ணப்பித்தவர்கள் மட்டுமே சாலையில் நடமாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தியாவில் சனிக்கிழமை முதன்முறையாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியானது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை 90 லட்சத்தைக் கடந்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

three × 4 =