மறுவாழ்வு பெற்றது கட்டிப்பிடி கலாசாரம்

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின்

சில பகுதிகளில், பொதுமுடக்க தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால், திங்கள்கிழமை முதல் கட்டிப்பிடி கலாசாரம் மீண்டும் துளிர்க்க தொடங்கியது.

இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் கட்டுப்பாடுகளுடன் உள்அரங்கில் கூடி தங்கள் அன்புக்கு இனியவர்களை அரவணைத்து அன்பை பரிமாறி வருகின்றனர். இதேபோல், உணவகம் மற்றும் மதுபான விடுதிகளின் உள்பகுதியை பயன்படுத்தவும் தடை ஏதுமில்லை என்பதால், அங்கும் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து நேரம் செலவழித்து வருகின்றனர்.

இதேபோல், வெளிநாட்டு பயணங்கள் மீதான தடையும் தளர்த்தப்பட்டு புதிய விதிமுறைகள் அமலுக்

கு வந்தன.

எனினும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், வாரம் இருமுறை பரிசோதனை செய்துகொள்ளவும் வேண்டுமென பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நாம் அனைவரும் இணைந்து அடுத்த மைல்கல்லை எட்டினாலும், இந்த அடியை மிகவும் கவனத்துடன் எடுத்துவைக்க வேண்டும். வைரஸை ஒழிக்க வேண்டும் என்றால், புதிய சுதந்திரத்தை அனுபவிக்கும் அதே வேளையில், ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்தில் அறிகுறி இல்லாதவர்கள் கூட லேட்டரல் டெஸ்ட் எடுத்துக் கொ

ள்ளலாம். இதில், 30 நிமிடத்தில் முடிவு தெரிந்துவிடும். இதுபோல வேல்ஸ், வடக்கு அயர்லாந்தில், வெளியிடங்களுக்கு சென்று அலுவல் பணி மேற்கொள்பவர்களும் இந்த பரிசோதனை மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸில் இந்த புதிய தளர்வுகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன. ஆனாலும், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவ், மோரே பகுதிகளில் கரோனா கட்டுக்குள் வராததால், அங்கு எந்தவித தளர்வுகளும் நடைமுறைக்கு வரவில்லை. பொதுமக்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

10 − one =