டெல்லி முதல் கேரளா வரை லாக்டவுன் ஒரு பார்வை…

இந்தியாவில் கரோனா 2ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், டெல்லி முதல் கேரளா வரை பொதுமுடக்கம் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்

டெல்லி: மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு குறைந்தால், படிப்படியாக பொதுமுடக்கம் தளர்த்தப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம்: மே 31ஆம் தேதி காலை 7 மணிவரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி பணி, தொழிற்சாலை சார்ந்த தொழில்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு: பொதுமுடக்கத்தை மே 31ஆம் தேதி வரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நீட்டித்தார். ஆனாலும், மின்னணு வணிகம் காலை 8 முதல் மாலை 6 மணிவரை தடையின்றி நடைபெறும். தோட்டக்கலை துறை சார்பில், அத்தியாவசிய காய்கறிகளும், பழங்களும் வீடுகளுக்கே வந்து விநியோகிக்கப்படும்.

கர்நாடகம்: ஜூன் 7ஆம் தேதி காலை 6 மணிவரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.

ஜம்மு காஷ்மீர்: மே 31ஆம் தேதி காலை 7 மணிவரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத்: மே 28ஆம் தேதி வரை 36 மாவட்டங்களில் இரவு 8 முதல் காலை 6 மணிவரை பகுதிநேர பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. நேரக் கட்டுப்பாட்டில் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கோவா: மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் பொதுவெளியில் கூடுவதற்கு தடை.

 

மகாராஷ்டிரா: ஜூன் 1ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; மாநிலத்தினுள் நுழைபவர்கள் கட்டாயம் கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது அவசியம்.

ஹரியாணா: மே 31ஆம் தேதிவரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், ஷாப்பிங் மால் அல்லாத தனிக் கடைகள் பகல் நேரத்தில் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட: மே 27வரை பகுதிநேர பொதுமுடக்கம் நீட்டிப்பு; மாவட்டங்களுக்கு இடையே தனியார் வாகனங்கள் இ பாஸ் பெற்றுச் செல்ல அனுமதி.

சத்தீஸ்கர்: அடுத்த அறிவிப்பு வரும் வரை மே 31ஆம் தேதி கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்: ஜூன் 8ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.

கேரளா: மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; மலப்புரம் மாவட்டத்தில் மூன்று மடங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூரில் கடுமையான பொதுமுடக்க விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Add your comment

Your email address will not be published.

nine − two =