உள்ளூர் அளவில் பொதுமுடக்கம்

பிரதமர் சூசகம்

பிரிட்டனில் ஆங்காங்கே கண்டறியப்பட்டுள்ள இந்திய வகை கரோனாவால் பிரதமர் போரிஸ் ஜான்சன் மிகவும் விரக்தியில் இருப்பதாகவும், இதனால் உள்ளூர் அளவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையால் தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால், மருத்துவமனையில் படுக்கைகளின்றி கரோனா நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது. இந்தியா வகை உருமாறிய கரோனா தொற்று பிரிட்டனிலும் ஆங்காங்கே கண்டறியப்படுவதால், இதுகுறித்து பிரதமர் கலக்கம் அடைந்திருப்பதாகவும், இந்த சூழலை எதிர்கொள்வதற்கான திட்டம் ஏதும் கைவசம் இல்லை என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கவுண்டி டர்ஹாம் பெரிஹிலில் உள்ள பிரைமரி பள்ளியில் செய்தியாளர்களை அவர் வியாழக்கிழமை சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பிரதமர் பதிலளிக்கையில், அது கவலைக்குரிய தொற்று வகை. அதனால் நாங்கள் விரக்தியில் இருக்கிறோம் என்றார். மேலும், கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உள்ளூர் அளவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்று கேட்டபோது, அதற்கான சாத்தியத்தை அவர் மறுக்கவில்லை. இதன்மூலம் ஆங்காங்கே உள்ளூர் அளவில் பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

six + 13 =