யுனெஸ்கோ அந்தஸ்தை இழக்கும் லிவர்பூல்

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரம் பிரதான வணிக மையமாக விளங்கியது. மேலும், இந்நகரம் பல்வேறு புராதன நினைவுச் சின்னங்களையும் கொண்டிருப்பதால் அது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த 2004ஆம் ஆண்டு பாரம்பரிய நினைவுச் சின்ன அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பத்தாண்டுகளில் லிவர்பூலின் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு நவீன கட்டமைப்புகள் காரணமாக அந்த அந்தஸ்தை லிவர்பூல் இழக்கவுள்ளது. இதற்கான ஆய்வறிக்கை யுனெஸ்கோவிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல், கால்பந்து, கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 30 பேர் யுனெஸ்கோ அமைப்புக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

fifteen + nine =