ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பிரிட்டனில் டிரைவர்களாக பணியாற்றி வருகின்றனர். பிரிட்டனில் டிரைவர்களாக பணியாற்றும் நபர்கள் பிரிட்டன் அரசு போக்குவரத்து துறை வழங்கும் வாகன ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் பெற வேண்டும்.
கடந்த 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு கொரோனா பெருந்தொற்று பரவலால் டிரைவிங் லைசன்ஸ் வழங்கும் பணி முழுமையாக தடைபட்டது. இந்த காலகட்டத்தில் டிரைவிங் லைசென்ஸ் ஆன்லைன் வழியாகவோ அல்லது மெயில் வழியாகவோ விண்ணப்பித்து விட்டு காத்திருக்கும் 30 லட்சம் பேருக்கு இன்னமும் லைசென்ஸ் கிடைத்த பாடில்லை.
இதனால் பெரும்பாலான டிரைவர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை முடிவு செய்யும் எடுத்து விட்டனர். நாடாளுமன்றத்தின் பொது கணக்கு குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்தது.