இறந்துபோன தந்தைக்கு கடிதம் எழுதிய சிறுமி

இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பகுதியில் பிரவுண்ஸ்டோனில் உள்ள தபால் பெட்டியில் கடந்த திங்கள்கிழமை தந்தையர் தினத்தன்று கடிதம் ஒன்று கிடந்தது. அதைப் பார்த்த தபால்காரருக்கு திகைப்பு. காரணம், அதில் “டூ’ முகவரியில் சொர்க்கம் (ஹெவன்) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அதை எங்கே சென்று ஒப்படைப்பது என குழம்பிய தபால்காரர் இதுகுறித்து தனது மேல் அதிகாரிகளிடம் முறையிட்டார். பின்னர், அந்தக் கடிதத்தை வியப்பு மேலிட சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார்.

பதிவிட்ட அடுத்த சில வினாடியில், ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் இட ஆரம்பித்தனர். ஒருவழியாக அந்தக் கடிதம் சாரா டுல்லி என்ற பெண்ணின் வீட்டு முகவரியிலிருந்து தபால் பெட்டியில் போடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தபால்காரர், அந்தக் கடிதத்தை அந்த பெண்ணிடம் ஒப்படைத்தார். அதில் முறையான முத்திரை அதாவது ஸ்டாம்ப் கூட இல்லை. அந்தக் கடிதத்தை தனது 8 வயது மகள் தான், மறைந்த அவரது தந்தையை நினைத்து எழுதியதாக கூறிய அந்த பெண், கடிதத்தை வாங்கி உணர்ச்சிப் பெருக்கில் அழ ஆரம்பித்தார். 4 மாத கைக் குழந்தையாக இருக்கும்போதே தனது மகள், தந்தையை இழந்துவிட்டதாகவும், அவரது இந்த செயலால் தான் மிகவும் நொறுங்கிப் போய்விட்டதாகவும் அந்த பெண் உருக்கமாக தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

1 × four =