திறந்த அடுத்த வாரமே உணவகத்துக்கு பூட்டு

 

கார் விபத்தால் நேர்ந்த சோகம்

 

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் மீன்வுட் ரோட்டில் உள்ளது சக்கோ இத்தாலிய உணவகம். கரோனா பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், இந்த உணவகத்தின் உள்பகுதி கடந்த வாரம் தான் திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், உணவக ஊழியர்களும், உரிமையாளரும் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில், அவர்களது மகிழ்ச்சிக்கு முடிவுகட்டும் வகையில் அமைந்தது விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ. கார். இந்த உணவகம் அமைந்துள்ள மீன்வுட் சாலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை தறிகெட்டு ஓடிய அந்த கார், திடீரென உணவகத்தின் சுவரை பெயர்த்துக் கொண்டு உள்ளே சென்றது. இதனால், அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தன.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால், திறந்த அடுத்த வாரமே உணவகம் மூடுவிழா கண்டுள்ளது. இந்த சம்பவத்தால் தங்களது இதயம் நொறுங்குவதாகவும், சேதமடைந்த பொருள்கள் அனைத்தையும் சீரமைத்த பின்னர் உணவகம் மீண்டும் திறக்கப்படும் என்றும் அதன் மேலாளர் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

fourteen − 11 =